சுடச்சுட

    

    வானிலை நிகழ்வை காண நாளை சிறப்பு ஏற்பாடுகள்

    By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிபேடு மைதானத்தில் வானியல் நிகழ்வை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     இந்த நேரத்தில் வானில் தோன்றுகின்ற விண்மீன்கள், கிரகங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட உள்ளது. இந்த மாதத்தில் தெரிகின்ற விண்மீன் கூட்டங்கள் மற்றும் கோள்கள் பற்றிய வானியல் வரைபடம் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தொலைநோக்கி மூலமாகவும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை அறிவியல் தொழில்நுட்ப மாமன்றத்தின் கீழ் செயல்படும் முனைவர் அப்துல் கலாம் மையம் மற்றும் கோளரங்க ஊழியர்கள் செய்துள்ளனர். பொதுமக்கள் இதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai