சுடச்சுட

  

  விவசாயக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பில் தெளிவில்லை; இந்திய கம்யூனிஸ்ட் புகார்

  By புதுச்சேரி  |   Published on : 22nd September 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூ.15 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறிவிப்பில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன் குற்றம்சாட்டினார்.
   அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழுவை கூட்டாமல் காங்கிரஸ் அரசு ஜனநாயக கடமையை மீறி செயல்படுகிறது. நீட் தேர்வு தொடர்பாக அரசு தெளிவான பதில் கூறவில்லை. விவசாயக் கடன் ரூ.15 கோடி கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடவில்லை. புதிய தொழிற்கொள்கையில் தொழிலாளர்கள் நலனுக்காக எதுவும் இல்லை.
   விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொலிவுறு நகர திட்டத்தில் புதுச்சேரி இடம் பெற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
   மத்திய பல்கலை.யில் மாணவர் சேர்க்கையில் புதுவைக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆராய்ச்சிப் படிப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து பல்கலை மானியக்குழு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பழங்குடியினர் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளோம்.
   இதுதொடர்பாக 28-ஆம் தேதி பல்கலை. முன் போராட்டம் நடத்தப்படும்.
   லெனோவா செல்லிடப்பேசி உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளது வரவேற்புக்குரியது. ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்னையில் முதல்வர் அணுகுமுறை சரியில்லை. தொழிலாளர் விரோதப் போக்கையை அரசு கடைப்பிடித்து வருகிறது.
   தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் கூறியது: பாப்ஸ்கோ முறைகேடு தொடர்பாக அரசுச் செயலர் பி.ஆர்.பாபு விசாரணை நடத்துவார் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவர் மீது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், முறைகேடு புகார் எழுந்ததால், அவரை பாப்ஸ்கோ முறைகேடுகள் குறித்த விசாரணை செய்வதில் இருந்து விடுவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே அரசு நியமனங்களை செய்ய வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai