சுடச்சுட

  

  "7ஆவது ஊதியக் குழு பரிந்துரையை உடனே அமல்படுத்தாவிட்டால் போராட்டம்'

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என புதுவை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
   இதுதொடர்பாக கூட்டமைப்பின் கெüரவத் தலைவர் சேஷாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியது:
   கடந்த 6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தியபோது அரசு ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கும் தடையின்றி வழங்கப்பட்டது.
   ஆனால் 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் குழு அமைத்து ஆய்வு செய்து, அரசு முடிவு செய்யும் என்று அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாய் உள்ளது. எனவே, இந்த முடிவை அரசு கைவிட்டு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai