சுடச்சுட

  

  7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமல்:  முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல் செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
   அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் இந்த மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்
   பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
   பின்னர், செப்டம்பர் மாதம் முதல் இந்த ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இது பின்னர் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல் செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக ஆசிரியர்கள் கூட்டமைப்புத் தலைவர் துளசி தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல்வர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
   மேலும், புதுச்சேரி, உழவர் கரையை இணைத்து மாநகராட்சியாக மாற்றி 24 சதவீத வீட்டு வாடகைப்படியும், பிற பகுதிகளுக்கு 16 சதவீத வீட்டு வாடகைப்படியும் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai