சுடச்சுட

  

  ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தி அக்.5-ல் ஆர்ப்பாட்டம்

  By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி அக்டோபர் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு சமூகநல அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

   மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் செகா கலைக் கூடத்தில் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புச் செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், தமிழர் களம் செயலாளர் அழகர்,
   கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் சந்திரசேகரன், லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் பஷீர் அகமது, இலக்கிய பொழில் இலக்கிய மன்றம் தலைவர் பராங்குசம் உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
   புதுச்சேரி அரசு கடந்த 23.12.2013ல் ஆட்டோ கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி, 1.8 கி.மீ.க்கு ரூ.25, கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கு ரூ.15, காத்திருக்கும் ஒவ்வொரு அரை மணிக்கும் ரூ.20 என்றும், இதில் இரவு 10 முதல் அதிகாலை 5 மணிவரை 50 சதவீதம் கூடுதலாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
   ஆனால், அதன்படி ஆட்டோக்கள் கட்டணம் வசூலிப்பதில்லை.
   மீட்டரும் பொருத்தாமல் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதன் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
   அண்டை மாநிலங்களில் புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட குறைவாகவே உள்ளது. மேலும், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், ஆட்டோ உதிரிப் பாகங்களின் விலையும் குறைவாக உள்ளது.
   இக்கோரிக்கை தொடர்பாக ஆளுநர், முதல்வர், அமைச்சர், தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை செயலர், ஆணையர் ஆகியோரை கூட்டாக சந்தித்து மனு அளிப்பது. மேலும், இதை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai