சுடச்சுட

  

  இந்திய உடைகளுடன் உலா வந்த வெளிநாட்டு மாணவிகள்

  By புதுச்சேரி  |   Published on : 23rd September 2016 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  1

  புதுச்சேரியில் பாரம்பரிய இந்திய சேலைகளுடன் வெளிநாட்டு மாணவிகள் உலா வந்தது காண்போரைக் கவர்ந்தது.
   நமது பாராம்பரிய உடைகளை நாமே மறந்து வரும் நிலையில் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நமது உடைகளான வேட்டி, சேலைகளை அதிகளவில் அணிந்து வருகின்றனர்.
   நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாம் நமது பாராம்பரிய உடைகளை தவிர்த்து வருகிறோம் இதனால், பொது இடங்கள், கோயில்கள், சுப நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவோரை காண்பதே அரிதாகிவிட்டது.
   இந்த நிலையில், புதுச்சேரிக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நமது பாரம்பரிய மற்றும் கலாசாரம் குறித்து, கேட்டு தெரிந்துகொண்டு நம் கலாசாரத்துக்கு மாறுவதை விரும்புகின்றனர்.
   இதேபோல, நார்வே நாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் துறையில் மாணவர்கள் 24 பேர் புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்துள்ளனர். இவர்களில் பெண்கள் பட்டுச் சேலை உடுத்தி, தலையில் மல்லிகைப் பூ வைத்தும், ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும் சுற்றுலாத் தலங்களுக்கும், கோயில்களுக்கும் செல்கின்றனர்.மேலும், இவர்கள் உள்ளூர் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்று வழிபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai