சுடச்சுட

  

  கலை, அறிவியல் இறுதிக் கட்ட கலந்தாய்வு: இடங்கள் இல்லாமல் மாணவர்கள் ஏமாற்றம்

  By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பிராந்தியத்தில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு (கபாஸ்) வியாழக்கிழமை நடைபெற்றது.
   இதில் போதிய இடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
   புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, கதிர்காமம் இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கல்லூரி, வில்லியனூர் கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி, மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி என 6 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 2118 இடங்கள் உள்ளன.
   இந்த இடங்களை நிரப்ப ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த சேர்க்கை முறையில் (கபாஸ்) கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2016-17ம் ஆண்டு கலை, அறிவியல் பாடப்பிரிவில் சேர 6100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கலந்தாய்வு தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்றது.
   இதில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பிய நிலையில் விண்ணப்பித்திருந்த
   1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. எனவே, கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
   இதையேற்று முதல்வர் நாராயணசாமி புதுவை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு ஒவ்வொரு கல்லூரிகளிலும் கூடுதல் இடம் உருவாக்க அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினார்.
   அதன்படி, தாகூர் கல்லூரியில் 35, ராஜீவ் காந்தி கல்லூரியில் 17, காமராஜர் கல்லூரியில் 22, கஸ்தூரிபாய் கல்லூரியில் 3 என மொத்தம் 77 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன.
   85 காலி இடங்கள்
   இந்நிலையில் கூடுதல் இடங்கள் மற்றும் ஏற்கெனவே எஞ்சிய இடங்களைச் சேர்த்து 86 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 22-ம் தேதி நடைபெறும். முன்னதாக, 21-ம் தேதி இதுவரை இடம் கிடைக்காத மாணவர்கள் தங்களது பெயரை கபாஸ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
   இதையடுத்து 582 மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் புதுச்சேரி குடியுரிமை இல்லாததால் 15 பேரும், அதிக வயது காரணமாக 5 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மீதியுள்ள 562 பேர் கலந்தாய்வு நடைபெறும் கபாஸ் அலுவலகத்தின் முன் குவிந்தனர்.
   மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இதில், மாணவர்கள் கலந்து கொண்டு, கல்லூரியில் சேர்வதற்கான ஆணை கடிதத்தை பெற்றனர்.
   இருப்பினும 450-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியிலும் சேர இடம் கிடைக்கவில்லை. புதிதாக கல்லூரியோ அல்லது பாடப்பிரிவுகளையோ அரசு உருவாக்கி இருந்தால் விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைத்திருக்கும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai