சுடச்சுட

  

  சென்டாக்: பொறியியல் 3-ம் கட்ட கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்-பெற்றோர் நலன் கருதி பொறியியல் படிப்புக்கான சென்டாக் 3-ம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
   அதன் துணைத் தலைவர் ம.இளங்கோ, துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிய மனு விவரம்:
   புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தாய்வு கடந்த ஜூலை தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது.
   இதில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவிகள் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
   தற்போது நெருக்கடியான நிலையில் தான் மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
   பெரும்பாலோர் 2-ம் கட்ட கலந்தாய்வில் கிடைத்த இடங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பலர் மருத்துவம் உள்ளிட்ட வேறு பாடப்பிரிவுகளுக்குச் சென்று விட்டனர்.
   இதனால், அந்த இடங்கள் காலியாக உள்ளன. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் மட்டும் 68 இடங்கள் காலியாக உள்ளன. தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன.
   3-ம் கட்ட பொறியியல் கலந்தாய்வை நடத்தினால் குறைந்த கட்டணத்தில் ஏராளமான மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறுவர்.
   எனவே, துணைநிலை ஆளுநர் தலையிட்டு 3-ம் கட்ட பொறியியல் கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai