சுடச்சுட

  

  தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

  By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
   புதுச்சேரியை அடுத்துள்ள திருக்கனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயா (40). இவரது கணவர் சங்கர், மனநலம் பாதிக்கப்பட்டவர்.
   இவர்களது மகன் ராஜேஷ் என்ற மணிகண்டன் (25). இவர் தாயுடன் வசித்து வந்தார். விஜயாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதுகுறித்து அறிந்த மணிகண்டன், தனது தாயைக் கண்டித்தாராம்.
   இதற்கிடையே, 1.2.2015-இல் விஜயா வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுதொடர்பாக திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
   பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயா கழுத்தை
   நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
   இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் விஜயாவை கொலை செய்தது தெரிய வந்தது.
   உறவினர்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் தாய் விஜயாவை, தாக்கி, கீழே தள்ளி கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், அதை மறைப்பதற்காக தூக்கில் தொங்க விட்டு தற்கொலை என நாடகமாடியதாகவும் போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
   இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் அமர்வு
   நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி சிவி.கார்த்திகேயன் மணிகண்டனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், 182-வது பிரிவின் கீழ் 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
   அரசுத் தரப்பில் வழக்குரைஞர் மோகன்தாஸ் ஆஜரானார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai