சுடச்சுட

  

  மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து வில்லியனூரில் பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   அமைதிக்கும், ஆன்மிகத்துக்கும் பெயர்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் பயந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதை கண்டித்தும், காங்கிரஸ் அரசும், காவல் துறையும் ரௌவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் குற்றச் செயல்களை தொடர்ந்து ஊக்குவிப்பதாகக் கூறி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   மாவட்டத் தலைவர் எஸ்.மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் வி.செல்வம், மாநில நிர்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.நாகராஜன், எம்.லட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் பி.கண்ணன், எஸ்.பெருமாள், ஏ.கமலபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai