Enable Javscript for better performance
பெண்கள் மீதான பாலியல் வழக்குகளில் துரித நடவடிக்கை: கிரண்பேடி உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பெண்கள் மீதான பாலியல் வழக்குகளில் துரித நடவடிக்கை: கிரண்பேடி உத்தரவு

    By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:49 AM  |   அ+அ அ-   |    |  

    பெண்கள் மீதான பாலியல் வழக்குகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
     புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய பெண்கள் ஆணையத்துக்கு புகார் சென்றது. இதுபற்றி பெண்கள் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.
     இதை அறிந்த ஆளுநர் கிரண்பேடி, காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
     அப்போது முடிவு ஏற்படாத வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான மற்ற வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai