சுடச்சுட

  

  மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்; பெண் கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை

  By புதுச்சேரி  |   Published on : 23rd September 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தடையை மீறி ஆற்றில் மணல் அள்ளிய மூன்று மாட்டு வண்டிகளை பெண் கிராம நிர்வாக அதிகாரி மடக்கி பறிமுதல் செய்தார்.
   புதுச்சேரி முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு வருவாய்த்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி பல்வேறு இடங்களில் மணல் அள்ளுவது தொடர்கிறது.
   இந்நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி ஒதியம்பட்டு கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் பெருமாள் என்பவர் மணல் அள்ளும்போது மணல் சரிந்து பலியானார்.
   இச்சம்பவத்தைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மணல் திருட்டை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
   இந்நிலையில், வியாழக்கிழமை காலை தொண்டமாநத்தம் கிராமத்தின் வெள்ளேரியில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது.
   இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி, மணல் அள்ளுவதை தடுத்தார்.
   மேலும், மணல் அள்ளிச் சென்ற மூன்று மாட்டு வண்டிகளையும், உரிமையாளர்களையும் வில்லியனுர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவந்து ஒப்படைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai