Enable Javscript for better performance
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

    By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:42 AM  |   அ+அ அ-   |    |  

    புதுவையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
     புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாஸ் (45). இவருக்கு திருமணமாகி மனைவியும்
     3 குழந்தைகளும் உள்ளனர். இவர் லாஸ்பேட்டையில் உள்ள மார்பிள்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் புதன்கிழமை பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த தாஸ், மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். பின்னர், அவரது மனைவி மொட்டை மாடிக்குச் சென்று உணவு கொடுத்துவிட்டு கீழே வந்துவிட்டார். உணவு உண்ட தாஸ், மொட்டை மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai