சுடச்சுட

    

    நீட் தேர்வு முறைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுவையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை வகித்தார்.
     தமிழ்மாநில குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் உலகநாதன், முருகன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு ஆதரவாக செயல்படுவதை கைவிட வேண்டும்.
     அரசுக்கு வழங்க வேண்டிய 50 சதவிகித மருத்துவ இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     சென்டாக் மாணவர்களிடம் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்,
     நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுவை மாணவர்களுக்கு கேரள அரசு நிர்ணயித்துள்ள வகையில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் எழுப்பினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai