சுடச்சுட

  

  ரத்தப் புற்று நோயாளிகளுக்கு சுயஉதவிக் குழு ஜிப்மரில் தொடக்கம்

  By  புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  ரத்தப் புற்று நோயாளிகளுக்கான "சாத்தியம்' என்ற சுயஉதவிக் குழு ஜிப்மரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

   செப்டம்பர் 22 உலக ரத்தப் புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜிப்மர் மருத்துவ புற்று நோயியல் துறை வியாழக்கிழமை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரத்தப் புற்றுநோய் கண்ட நோயாளிகளுக்கு என சுயஉதவிக்குழு "சாத்தியம்' என்ற பெயரில் ஏற்படுத்துப்பட்டது.

   இக்குழுவின் நோக்கமானது நோயாளிகளுக்கு தங்கள் நோயைப் பற்றிய முழு அறிவை அளிக்கவும், அவர்கள் சிகிச்சை குறித்த சந்தேகங்கள் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்கவும், முறையான மற்றும் தகுந்த கால அளவில் சிகிச்சையைப் பெற ஊக்குவிப்பதே ஆகும்.

   சாத்தியம் குழுவை தொடங்கிவைத்த ஜிப்மர் இயக்குநர் பரிஜா நோயாளிகள் மருத்துவக் கல்வி மற்றும் தகவல் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், சுய உதவிக் குழுக்கள் மூலம் நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் புற்றுநோய் பற்றிய தெளிவைப் பெறமுடியும்.

   மேலும், ஜிப்மரில் புற்றுநோய் சிகிச்சை நோயாளிகளுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுத் தருவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.

   மருத்துவ புற்று நோயியல் துறைத் தலைவர் பிஸ்வஜித் ரத்தப் புற்றுநோய் பற்றியும் ஜிப்மரில் இலவசமாக கிடைக்கும் சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கினார்.

   சாத்தியம் குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை மருத்துவ சமூகப் பணியாளர் அஞ்சலி விளக்கினார். சமூகசேவை அதிகாரி சித்ரலேகா மருத்துவச் சிகிச்சையில் சுயஉதவிக் குழுக்களின் அவசியத்தை வலியுறுத்தினார். மருத்துவர்கள் பொன்ராஜ், கிரண் ரத்தப் புற்றுநோய் பற்றி விவரித்தனர். துணை பேராசிரியர் ஸ்மித்தாகாயல் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai