சுடச்சுட

  

  வழக்குகள் நிலுவை: சிறார் நீதிமன்றத்தை வாரம் இருமுறை நடத்த திட்டம்

  By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறார் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ளதால் புதுச்சேரி சிறார் நீதிமன்றத்தை வாரம் இருமுறை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
   புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் கண்காணிப்பு இல்ல வளாகத்தில் சிறார் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
   இதன் முதன்மை நடுவராக நீதிபதி எம்.தனலட்சுமி செயல்பட்டு வருகிறார். சிறார் குற்றங்கள் தொடர்பாக இந்நீதிமன்றத்தில் தற்போது 205 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், 110 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை.
   மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 25 வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகளில் தொடர்புடைய காவல் நிலையங்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
   சிறார் வழக்குகள் தொடர்பாக விசாரணை 4 மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின்படியும், வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டால் அதுதொடர்புடைய சிறார் வாழ்வாதாரம், எதிர்காலத்தை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, வழக்குகள் எண்ணிகையை கருத்தில் கொண்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இரு முறை சிறார் நீதிமன்றம் கூடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai