சுடச்சுட

  

  அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை செப்.30-க்குள் நிரப்பக் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரியுள்ளது.
   இதுகுறித்து அதன் தலைவர் வை.பாலா, சென்டாக் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பிய மனு:
   சென்டாக் இறுதிக்கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இந்நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9 இடங்கள், 3 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 11 இடங்கள் என மொத்தம் 23 இடங்கள் காலியாக உள்ளன என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   2ஆம் கட்ட கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெற்ற 23-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு பகுதி கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மீதியுள்ள கட்டணத்தின் பெருந்தொகையை பொருளாதார ரீதியில் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை அவர்கள் செலுத்திய கட்டண விவரங்களையும், செலுத்த வேண்டிய பாக்கி கல்விக் கட்டண விவரங்களையும் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் சென்டாக் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
   கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் இருப்பின் மீண்டும் அத்தகைய சென்டாக் ஒதுக்கீட்டு இடங்களை இறுதிக் கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
   இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் அளிக்கப்பட்ட மருத்துவ இடங்களில் நிரப்பப்படாத நிலையில் உள்ள மருத்துவ இடங்களை உச்சநீதிமன்ற அனுமதி பெற்று வரும் 30-ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்.
   அரசு ஒதுக்கீடாக தனியார் கல்லூரிகளிடமிருந்து பெற்ற 283 எம்பிபிஎஸ் இடங்களையும், 95 பிடிஎஸ் இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai