சுடச்சுட

  

  புதுச்சேரியில், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து செல்லும் ஆற்று வாய்க்காலை மழைக்காலத்துக்கு முன்பே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
   புதுச்சேரி வில்லியனூரில் இருந்து முருங்கப்பாக்கம் வரை 20 கிராமங்களை கடந்து செல்லும் மிகப்பெரிய ஆற்று வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத காரணத்தினால் குப்பைகள் மண்டி புதராகக் காணப்படுகிறது.
   இதனால் உருவாகும் கொசு மற்றும் விஷ ஜந்துக்களின் தொல்லையால் கிராம மக்கள் பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசாங்கம் மழைக்காலத்துக்கு முன்பாக விரைந்து செயல்பட்டு ஆற்று வாய்க்காலை தூர் வார வேண்டும், நோய் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai