Enable Javscript for better performance
இந்து முன்னணியினர் சாலை மறியல்: 30 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணியினர் சாலை மறியல்: 30 பேர் கைது

    By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |    |  

    கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரி பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
     கோவை சுப்ரமணியபாளையத்தில், இந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரை அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் கொலை செய்து விட்டு ஓடிவிட்டது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இக்கொலைச் சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுவை மாநில நிர்வாகி முருகய்யன் உள்பட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai