சுடச்சுட

  

  கலைக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கல்வி அமைச்சரிடம் மாணவர்கள் மனு

  By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி கலைக்கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.
   அதன் மாநிலச் செயலர் ஆ.ஆனந்து, விண்ணரசு, பரத் மற்றும் கலைப்பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், அவர்களின் பெற்றோர், சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணனை சந்தித்து மனு அளித்தனர்.
   கலைக் கல்லூரிகளில் போதிய இடங்களை ஏற்படுத்தாவிட்டால், நிகழாண்டில் மாணவ, மாணவியர் ஏராளமானோர் பாதிக்கப்படுவர். எனவே, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசன், இந்திரா காந்தி கலைக்கல்லூரிகளில் தேவையான வசதிகள் உள்ளன. எனவே, கலைப்பிரிவுகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்காது எனத் தெரிவித்தனர்.
   மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கமலக்கண்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai