சுடச்சுட

    

    தமிழக பழங்குடிகளின் வாய்மொழி இலக்கிய கருத்தரங்கம்

    By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாகித்ய அகாதெமி மற்றும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டுத்துறை சார்பில் தமிழக பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     புதுதில்லி சாகித்ய அகாதெமி செயலர் சீனிவாசராவ் வரவேற்றார். தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் நாச்சிமுத்து வாழ்த்திப் பேசினார். பொதுக்குழு உறுப்பினர் சம்பத் அறிமுக உரையாற்றினார். மொழியியல் பண்பாட்டு துறை இயக்குநர் (பொ) பக்தவச்சலபாரதி நோக்கவுரை ஆற்றினார்.
     இதனைத் தொடர்ந்து 5 அமர்வுகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அமர்வில் டாக்டர் நசிம்தீன் தலைமையில் முத்துலட்சுமி, ஞானபாரதி, விஜயலட்சுமி ஆகியோர் முதுவர் பழங்குடி, நீலகிரி இருளர் பழங்குடி, இரவாளர் பழங்குடி ஆகிய தலைப்புகளில் வாசித்தனர்.
     இரண்டாவது அமர்வில் சுந்தரமுருகன் தலைமையில் முத்தையா, சீனிவாசவர்மா, துரைமுருகன் ஆகியோர் பளியர் பழங்குடி, நரிக்குறவர், காட்டுநாயக்கன் ஆகிய தலைப்புகளில் கட்டுரை வாசித்தனர்.
     இதில் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். பொறுப்பு அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.
     கருத்தரங்கில் 3, 4, 5 ஆகிய அமர்வுகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai