சுடச்சுட

  

  திருநள்ளாறில் இலவச பயண சேவையில் கட்டணம் வசூலிப்பு: பக்தர்கள் புகார்

  By  காரைக்கால்,  |   Published on : 24th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநள்ளாறு பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு, ஷேர் ஆட்டோ இலவச பயண சேவை உள்ள நிலையில், பக்தர்களிடம் அதன் ஓட்டுநர்கள் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
   திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து கோயில் மற்றும் நளன் குளம் செல்வதற்கு பேருந்து, வேன், கார் போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது.
   இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உத்தரவின்பேரில், கோயில் நிர்வாகம் சனிக்கிழமை மட்டும் இலவசமாக ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுத்தது. இதில் பயணிப்போரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இதற்கான தொகையை கோயில் நிர்வாகம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
   இந்தத் திட்டம் தொடங்கி ஒரு மாதமே ஆன நிலையில், பக்தர்களை கோயில் மற்றும் குளம் வரை கொண்டு விடும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், குறித்த தொகையை சிலரிடம் பக்தர்களிடம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது.
   இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, அவர் கூறுகையில், இலவசமாக பக்தர்களை கோயில், குளம் வரை வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   இது இலவச சேவை என ஆங்காங்கே விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வேறு மாதிரியான விளம்பரங்களும் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பக்தர்கள் யாரும் இந்த சேவையை பயன்படுத்தும்போது கட்டணம் தரத் தேவையில்லை.
   இது சம்பந்தமான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai