Enable Javscript for better performance
துணை வட்டாட்சியர் வீடு முன் தகராறு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    துணை வட்டாட்சியர் வீடு முன் தகராறு: 3 பேர் கைது

    By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 08:54 AM  |   அ+அ அ-   |    |  

    புதுவை அருகே துணை வட்டாட்சியர் வீடு முன் தகராறு செய்ததாக, 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் (34). அப்பகுதி கொம்யூன் துணை வட்டாட்சியராக உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சுண்ணாம்பாற்றில் மணல் கடத்தியதாக நோணாங்குப்பத்தைச் சேர்ந்த ஐயப்பன், ஜெயபாரதி ஆகியோரின் மாட்டு வண்டிகளை சிவராஜ் பறிமுதல் செய்துள்ளார். வண்டிகள் திரும்ப கொடுக்கப்படாததால், அவர்கள் இருவரும் நோணாங்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவருடன் சிவராஜ் வீட்டுக்குச் சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சிவராஜ் அளித்த புகாரின்பேரில், 3 பேரையும் அரியாங்குப்பம் போலீஸார் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai