சுடச்சுட

  

  நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

  By காரைக்கால்,  |   Published on : 24th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் நகராட்சி ஆணையரின் அவமரியாதை அணுகுமுறையைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை துப்புரவுத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
   போராட்டத்துக்கு நகராட்சி ஊழியர் சங்க மத்திய கூட்டமைப்பு பொறுப்பாளர் செல்வமணி தலைமை வகித்தார்.
   ஊழியர்களுக்கெதிரான அவமரியாதை அணுகுமுறையை நகராட்சி ஆணையர் கைவிட வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை ஆணையர் அலட்சியப்படுத்தினால், அடுத்தக்கட்டமாக போராட்டத்தன்மையை வேகப்படுத்துவோம் என செல்வமணி தெரிவித்தார்.
   இப்போராட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
   தகவல் அறிந்து காரைக்கால் நகர போலீஸார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai