சுடச்சுட

  

  நீட் தரவரிசை வெளியிட்டு பொதுக் கலந்தாய்வு: மாணவர்-பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர்கள் -பெற்றோர்கள் சங்கத் தலைவர் தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.
   இது குறித்து மேலும் அவர் கூறியது: நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
   நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும். இல்லையென்றால் அனைத்துத் தரப்பினரையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
   மேலும் 3ஆம் கட்ட சென்டாக் கலந்தாய்வு செப். 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்டாக் கலந்தாய்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த நிலையில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள புதிய 50 இடங்களில் 18 இடங்களை பெற்றுத்தருவதாக முதல்வர் அறிவித்தார். அந்த 18 இடங்களையும் பெற்று கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றார் அவர். சங்கத்தின் பொருளாளர் வி.சி.சி. நாகராஜன் உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai