சுடச்சுட

    

    பிரதமர் மோடியின் மனதின் குரல்: வானொலியில் நாளை ஒலிபரப்பு

    By காரைக்கால்,  |   Published on : 24th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் நரேந்திரமோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, காரை வானொலியில் ஒலிபரப்பாகிறது.
     பிரதமர் நரேந்திர மோடி செப்.25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 24-ஆவது முறையாக உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.
     பிரதமர் உரையின் தமிழாக்கத்தை அதே நாள் இரவு 8 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும். மனதின் குரல் என்ற இந்த இரு நிகழ்ச்சிகளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai