சுடச்சுட

  

  புதுச்சேரி கடற்கரைச் சாலை (குபேர் அவென்யூ)-ல் ரூ.18.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பிரெஞ்சு காலத்திய கழிப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
   கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு காலத்தில் வட்ட வடிவிலான கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கழிப்பறை சிதிலமடைந்து காணப்பட்டது.
   இந்த நிலையில் அதனை புதுப்பித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரினர். இதையடுத்து சுற்றுலாத் துறையின் கீழ் ரூ.18.5 லட்சம் செலவில் கழிப்பறையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இன்டாக் அமைப்பின் ஆலோசனையின்படி பழைமை மாறாமல் கழிப்பறை புதுப்பிக்கப்பட்டது.
   நவீனமான முறையில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கும் சிறிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, ராஜ்பவன் எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன் ஆகியோர் கழிப்பறையை திறந்து வைத்தனர். பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் பி.சுவாமிநாதன், சுற்றுலா இயக்குநர் ஆர். முனிசாமி உள்பட பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai