சுடச்சுட

    

    மத்திய பல்கலை.யில் மாணவர்கள் போராட்டம்: பிஎச்டியில் எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

    By புதுச்சேரி,  |   Published on : 24th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மத்திய பல்கலை.யில் பிஎச்டி படிப்பில், எஸ்சி-எஸ்டி பிரிவுக்கான இடஒதுக்கீடு கோரி, துணைவேந்தர் அறையை மாணவர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலை.யில், பிஎச்டி படிப்பில் மத்திய கல்வி மற்றும் இடஒதுக்கீடு சட்டப்படி, கடந்த 5 ஆண்டுகளாக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லையாம்.
     இதற்கு காரணமாக உள்ள பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,
     100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிர்வாக அலுவலகத்தில் உள்ள துணைவேந்தர் அறை முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பதிவாளருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு துணைவேந்தர் அனிஷா பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததன் பேரில், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai