சுடச்சுட

  

  ஊதியம் வழங்குவதில் தாமதம்: ஸ்வச்சதா நிறுவனம் முற்றுகை

  By DIN  |   Published on : 25th September 2016 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாமதமாக ஊதியம் வழங்குவதை கண்டித்து ஸ்வச்சதா கார்ப்பரேஷன் நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
  புதுவையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஸ்வச்சதா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தில் சுமார் 800 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
  இந்த நிலையில், ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதிக்கு மேல்தான் ஊதியம் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் பணியாற்றியதற்கான ஊதியம் சனிக்கிழமை வரை (செப். 24) வழங்கப்படவில்லையாம்.
  இதனைக் கண்டித்து அந்த நிறுவன ஊழியர்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள நிறுவன தலைமை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
  இதில், சுமார் 30 குப்பை லாரி ஓட்டுநர்கள், 45 சிறிய வண்டி ஓட்டுநர்கள், குப்பை அகற்றும் பெண்கள் உள்ளிட்ட சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.
  இதையடுத்து அங்கு வந்த நிறுவன அதிகாரிகள், திங்கள்கிழமை அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
  இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், எங்களுக்கு எந்தவித அடையாள அட்டையோ, ஒப்பந்த நகலோ வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்தில்தான் பணிபுரிகிறோம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தற்போது ஊதியமும் சரிவர தருவதில்லை என்றனர். ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால், புதுவையில் குப்பை அள்ளும் பணிகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai