சுடச்சுட

  

  புதுவை கடற்கரைக்கு வரும் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுகம் அருகே உள்ள காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் தெரிவித்தது: புதுவை கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடைபாதைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
  இதனால் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பழைய துறைமுகம் அருகில் உள்ள காலியிடத்தில் வாகனம் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் வாகனங்களை நிறத்திவிட்டு கடற்கரைக்குச் செல்ல புதிதாக வாயிற்கதவு போடப்பட்டுள்ளது.
  இதையடுத்து, கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சாலையோரம் வாகனங்களை நிறுத்த சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai