சுடச்சுட

  

  கோயம்புத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, காரைக்காலில் இந்து அமைப்பினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  கோயம்புத்தூர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கொலையாளிகளை கைது செய்யவேண்டும், இந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட இந்து அமைப்பினர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை பாரதியார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்து முன்னணி காரைக்கால் மாவட்ட தலைவர் கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். கொலையாளிகளைக் கண்டித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஜெய்சங்கர், பாஜகவைச் சேர்ந்த எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 40 பேர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை காரைக்கால் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai