சுடச்சுட

  

  கோயில் நிலங்களை தனியாருக்கு விற்கும் உத்தரவு ரத்து: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

  By DIN  |   Published on : 25th September 2016 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் உள்ள கோயில் நிலங்களை தனியாருக்கு விற்கும் உத்தரவை திரும்பப் பெறுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
  இதுகுறித்து, கூட்டம் முடிந்து வந்த முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஆட்சிகாலத்தில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை, குறிப்பாக, தரிசு மற்றும் பயன்பாடில்லாத நிலங்களை தனியாருக்கு விற்க முடிவு எடுக்கப்பட்டது. அதுகுறித்து கூட்டத்தில் விவாதித்தோம்.
  கோயில் நிலங்கள் கோயில் மேம்பாட்டுக்காக தனி நபர்களால் வழங்கப்பட்டவை. அதனை விற்றுவிட்டால் கோயில் நிர்வாகம் பாதிக்கப்படும். எனவே, கோயில் நிலங்களை விற்கும் உத்தரவை ரத்து செய்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  மேலும்,கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள், குத்தகைத் தொகை செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
  பொது இடங்களில் தலைவர்களின் சிலைகளை வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை அரசு ஆணையாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தவும் டிராக்டர், டிரையிலர் போன்றவற்றுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி தேவஸ்தானம் ஒதியம்பட்டு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் இலவச கணினிப் பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த இடத்துக்கான வாடகை அதிகமாக உள்ளது, குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. இதையடுத்து, வாடகையை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றார் முதல்வர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai