சுடச்சுட

  

  சாலைத் தடுப்புகளில் சுவரொட்டி ஒட்டினால் நடவடிக்கை : ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை

  By DIN  |   Published on : 25th September 2016 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் உள்ள சாலைத் தடுப்புகளில் (பேரிகேட்) சுவரொட்டி ஒட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
  புதுச்சேரியில் உள்ள சாலைத் தடுப்புகளில் சுவரொட்டிகள் ஒட்டி பாழடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவற்றுக்கு வண்ணம் தீட்டும் பணியை ஆளுநர் கிரண்பேடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிரண்பேடி பேரிகார்டுகளுக்கு மஞ்சள் நிற வண்ணம் தீட்டும் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  நிகழ்ச்சியில் ஐஜி கண்ணன் ஜெகதீசன், முதுநிலை எஸ்பி ராஜீவ் ரஞ்சன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், எஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வண்ணம் பூசினர்.
  மேலும், கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சமூக ஆர்வலர்களும், ஆளுநருடன் இணைந்து பேரிகார்டுகளுக்கு வண்ணம் தீட்டினர்.
  அப்போது, புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதோடு, ஒட்டுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
  பொதுமக்களே வண்ணம் தீட்டினர்
  புதுச்சேரி கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த 6 பேரிகார்டுகளுக்கு வண்ணம் தீட்டி பணியை தொடங்கி வைத்த ஆளுநர், பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
  இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமான போக்குவரத்து போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கிருந்தனர். ஆளுநர் சென்றதால் காவல்துறை உயரதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து அவர்களுடன், பேரிகார்டுகளை அப்படியே விட்டுவிட்டு பிற போலீஸாரும் சென்று விட்டனர். இதையடுத்து, அந்த பேரிகார்டுகளுக்கு பொதுமக்கள் வண்ணம் தீட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai