சுடச்சுட

  

  தூய்மையாக பராமரிக்கப்படாத மதுபானக் கூடங்கள் மற்றும் மதுக் கடைகளுக்கு ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கலால் துறை துணை ஆணையர் ஆபேல் ரொசாரியோ தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த செப். 18-ஆம் தேதி வில்லியனூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வில்லியனூரில் உள்ள ஒரு மதுக் கடை தூய்மையாக இல்லாமல் இருப்பதை அவர் பார்த்தார். இதையடுத்து, இதுகுறித்து கலால் துறை துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  இதனையடுத்து துணை ஆணையர் சம்பந்தப்பட்ட மதுக் கடையை ஆய்வு செய்தார். அப்போது கடையைச் சுற்றியும், கடையின் உள்ளேயும் பிளாஸ்டிக் கப்கள், காலி பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் போடப்பட்டு இருந்தன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
  புதுவை பகுதியில் உள்ள அனைத்து மதுபான விநியோகஸ்தர்களும் தங்களது கடைகளையும், மதுபானக் கூடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  தவறுவோருக்கு புதுச்சேரி கலால் சட்டம் மற்றும் விதிகளின்படி ரூ.ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai