சுடச்சுட

  

  காரைக்காலில் வாராந்திர தூய்மை விழிப்புணர்வுப் பணி  நேருநகர் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  காரைக்கால் மாவட்டம் தூய்மையான, பசுமையானதாக உருவெடுக்க மாணவர்களின் பங்களிப்புடன், சனிக்கிழமைதோறும் துப்புரவு விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
  காரைக்காலில் 6-ஆவது வாரமாக வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட நேருநகர் சுற்றுப் பகுதியில் தூய்மை விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
  சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் தொடங்கிவைத்தார் மாவட்ட சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், நகராட்சி ஆணையர் என்.காந்திராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 100 பேருடன், நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஒருங்கிணைந்து இப் பணியைச் செய்தனர்.
  நேருநகரின் பல்வேறு குறுக்குத் தெரு மற்றும் கடைத்தெரு பகுதி, அண்ணா கலைக் கல்லூரி வெளிப்புறம் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய துப்புரவுப் பணி, 9 வரை நடைபெற்றது.
  பணி நிறைவின்போது, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடையே பேசிய பேரவை உறுப்பினர், மாணவ, மாணவியருடன் சேர்ந்து பிரமுகர்கள் நடத்தும் தூய்மைப் பணி என்பது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்வதாகும். இதுபோன்ற பணியை தினமும் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் செய்ய முன்வர வேண்டும். இப் பணியை நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார் அவர். இந்த முகாம் மூலம் நேருநகர் வட்டாரத்திலிருந்து சுமார் 2 டிராக்டர் அளவிற்கு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai