சுடச்சுட

  

  : காரைக்காலில் திங்கள்கிழமை (செப்.26) முதல் அக்.1 வரை குழந்தைகளுக்கான நடமாடும் ஆதார் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை பெற வேண்டும் என்ற முயற்சிகளின் விளைவாக, மாவட்டம் 100 சதம் ஆதார் பதிவை நோக்கிச் செல்கிறது.
  இதன் ஒரு பகுதியாக 5 வயதுக்குள் உள்ள குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான நடமாடும் சிறப்பு ஆதார் பதிவு முகாம் வரும் திங்கள்கிழமை தொடங்கி அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  வீதிகளின் வழியே உங்கள் இல்லம் தேடி வரும் வாகனங்களில், உங்கள் குழந்தைகளுக்கான ஆதார் பதிவை நீங்கள் உறுதி செய்யலாம். குழந்தையின் தாய் அல்லது தந்தை இவர்களில் ஒருவர் குழந்தையுடன் கண்டிப்பாக வர வேண்டும்.
  இதற்கு குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அடையாள அட்டை நகல், பிறந்த பதிவு சான்றிதழ் வழங்கப்படாத குழந்தைகளைப் பொருத்தவரை, மருத்துவமனையில் வழங்கப்பட்ட விடுவிப்புச் சீட்டு இருந்தால் போதும்.
  காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai