சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி அருகே நிலத் தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இளைஞரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சியை அடுத்த செம்பாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் அன்பரசு (35). இவருக்கும் பக்கத்து நிலத்துகாரரான முதியவர் பொன்னுசாமிக்கும் (75) நிலத்துக்குள் இடையில் உள்ள வரப்பு தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
    இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமியின் மனைவி ரத்னா, அவரது மகன் தேவேந்திரன் ஆகியோர் அன்பரசை மண்வெட்டியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அன்பரசு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    இது குறித்த புகாரின்பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதியவர் பொன்னுசாமியை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai