சுடச்சுட

    

    புதுவையில் காமராஜர் நகர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
    புதுவை பல்கலைக்கழக சுற்றுலா கல்வித் துறையும், மேலாண்மை கல்வி துறையும் இணைந்து உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை தூய்மையான புதுச்சேரி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு காமராஜர் நகர் தொகுதிக்கு உள்பட்ட சூரியகாந்தி நகர், எழில்நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
    இந்த நிகழ்ச்சியை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சட்டப்பேரவைத் தலைவருமான வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai