Enable Javscript for better performance
பல்வேறு திட்டங்களின்கீழ் வங்கி மூலம் ரூ.1.57 கோடி கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு திட்டங்களின்கீழ் வங்கி மூலம் ரூ.1.57 கோடி கடனுதவி

    By DIN  |   Published on : 25th September 2016 05:56 AM  |   அ+அ அ-   |    |  

    அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கி மூலம் ரூ.1.57 கோடி கடனுதவியை புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினார்.
    காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம், இந்தியன் வங்கி இணைந்து கடன் வழங்கும் நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தியது. இங்கு பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் வேளாண்மை, மத்திய அரசின் முத்ரா கடன், ஸ்டான்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டது.
    புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்கிப் பேசியது:
    அரசு திட்டங்களின் கீழ் வங்கிகள் அளிக்கும் கடனுதவியின் மூலம் பயனாளிகள், குறித்த தொழிலை செய்து லாபம் ஈட்ட வேண்டும். வங்கிகள் அளிக்கும் கடனுதவியை மாற்று செலவுகள் செய்துவிட்டு, தொழில் செய்யாமல் இருப்பதன் மூலம் முன்னேற்றப் பயணம் தடைப்படும்.
    பெற்ற கடனை முறையாக ùசெலுத்தினால் வங்கிகள் மீண்டும் தாராளமாக கடனுதவி செய்யும் என்றார்.
    இம் முகாமில், 33 சுய உதவிக் குழுக்களுக்கும், 19 தனிநபர்கள் என ரூ.1.57 கோடி கடன் வழங்கப்பட்டது. இதில், இந்தியன் வங்கி காரைக்கால் கிளை மேலாளர் பி.அன்பு காமராஜ், இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குநர் பி.அகிலன், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
    நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் மகளிர் ஆடை வடிவமைப்பு பயிற்சியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai