சுடச்சுட

  

  புதுவை குருமாம்பேட் பாசிக் ஊழியர் ஊதியம் வழங்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
  புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). பாசிக் நிறுவனத்தில் தினக்கூலி ஊழியராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். பாசிக்கில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் மட்டுமன்றி நிரந்தர ஊழியர்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
  இந்நிலையில் சக்திவேலுவுக்கு உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்தும், பாசிக்கில் ஊதியம் வழங்கப்படாத பிரச்னையால் யாரும் பெண் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சக்திவேல், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் அருந்தியதாகத் தெரிகிறது.
  குருமாம்பேட்டில் உள்ள குப்பை தெளிப்பான் பிரிவுக்கு சனிக்கிழமை காலை பணிக்கு வந்த சக்திவேல் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடையந்த சக ஊழியர்கள், அவரை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுôரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
  தகவல் அறிந்த சக்திவேல் உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் திரண்டனர். ஊதிய பிரச்னையால் ஊழியர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருவதாகவும், இப்பிரச்னைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
  மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai