சுடச்சுட

  

  பேரவை வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

  By DIN  |   Published on : 25th September 2016 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பட்டா வழங்கப்பட்ட இடத்தை ஒதுக்கக் கோரி சட்டப்பேரவை வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
  புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை இரவு நடந்து கொண்டிருந்தது.
  அப்போது, அங்குள்ள முதல்வரின் தனிச் செயலாளர் ராஜமாணிக்கம் அலுவலகம் முன் வந்த ஒரு நபர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் தான் எடுத்து வந்திருந்த டெஸ்டர் கருவியை கழுத்தில் வைத்துக் கொண்டு தனக்கு நிலம் ஒதுக்காவிடில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார்.
  அந்தநேரத்தில் வேறு வேலையாக அங்கு வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி ஆறுமுகம், அந்த நபரை சமாதானப்படுத்தினார். இதற்கிடையே, பெரியகடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் மற்றும் பேரவை காவலர்கள் அந்த நபரை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
  காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை செய்ததில், அவர் சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்ராஜா (43) என்பதும், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தனக்கு சின்னையாபுரத்தில் மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
  ஆனால், அதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை. ஆகையால், மனைப்பட்டா வழங்கப்பட்ட அதே இடத்தில் இடம் ஒதுக்கித்தர வேண்டும் எனக் கோரி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai