சுடச்சுட

  

  வீட்டில் மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கட்டடப் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
  புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூலக்குளம் ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் பாபு (37). இவர், கடலூரில் கட்டடப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அந்தோனியம்மாள் (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
  ஆரோக்கியநாதன் பாபுவுக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் மது குடிக்கும் நோக்கில் மது பாட்டில்களை வாங்கி வந்தாராம். இதைப் பார்த்த அந்தோனியம்மாள் கண்டித்துள்ளார்.
  இதனால் மனமுடைந்த ஆரோக்கிநாதன் பாபு மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம். நீண்ட நேரமாக அறை பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த அந்தோனியம்மாள் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை திறந்தார். அப்போது, ஆரோக்கியநாதன் பாபு தூக்கில் சடலமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  குடும்பப் பிரச்னை:
  கணவர் தற்கொலை
  புதுச்சேரி, செப். 24: புதுவையில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  புதுச்சேரி லாஸ்பேட்டை நெருப்புக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (35). இவருடைய மனைவி சுதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கட்டடத் தொழிலாளியான முருகனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம்.
  இந்நிலையில், தம்பதி இடையே கடந்த 19-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
  அப்போது முருகன், சுதாவை கட்டையால் அடித்தாராம். இதனால் வேதனைக்குள்ளான சுதா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவி, குழந்தைகள் இன்றி தனிமையில் இருந்ததால் விரக்தியடைந்த முருகன் வெள்ளிக்கிழமை மனைவியை அழைத்துவரச் சென்றார்.
  அப்போது முருகனுடன் செல்ல சுதா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai