சுடச்சுட

    

    "மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்

    By DIN  |   Published on : 25th September 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலில் மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என, காரைக்கால் என்.ஐ.டி. மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவில் இந்திய அரசு செயலர் (ஓய்வு) டி.ராமசாமி அறிவுறுத்தினார்.
    காரைக்காலில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) 3-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை திருவேட்டக்குடியில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இக்கல்வி நிறுவனத்தில் கணினி பொறியியல், மின் அறிவியல், மின்னியல், மெக்கானிக்கல் (உஉஉ, உஇஉ, இநஉ, ஙஉ ) ஆகிய நான்கு பிரிவுகளில் பி.டெக் முடித்த 81 மாணவ, மாணவியருக்கும், எம்.டெக் முடித்த 10 மாணவ, மாணவியருக்கும் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சிவாஜி சக்கரவர்த்தி பட்டம் வழங்கினார்.
    விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப செயலர் (ஓய்வு) டி.ராமசாமி கலந்துகொண்டு பேசியது:
    உலகளாவிய அளவில் வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களையே இந்தியா பயன்படுத்துகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால், நமது சமுதாயம் வெகுவாக பாதிக்கிறது.
    இந்த நிலையில், மாறுதலான தொழில்நுட்பம் உலகத்துக்கு தேவைப்படுகிறது. செயலாக்கத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் கழிவுகள், உபயோகமில்லா கழிவுகளைக்கொண்டு மாணவர்கள்
    வளங்களை உருவாக்க வேண்டும். இந்தியாவில் உருவாக்கு என்ற திட்டம் இதற்கு சாத்தியமாகும். குறைந்த விலையில், சமுதாயத்துக்கு பாதிப்பு இல்லாத பொருளை நாம் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதற்கு மாணவர்களிடையே சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டியது அவசியம்.
    கல்லணை, தாஜ்மஹால் போன்றவை கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எந்த ஒரு நபரும் ஏற்றுக்கொள்ளும் கட்டடங்களாக இருக்கிறது.
    இதுபோன்றவையெல்லாம் உருவாக்கிய காலத்தை மாணவர்கள் கணக்கில் கொள்ளவேண்டும். இப்போதைய காலம், வரும் காலத்திற்கு தரமான, விலை மதிப்பு குறைந்த பொருளை உருவாக்கித் தரும் அறிவாற்றலை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்வதே இந்தியாவுக்கு தற்போதைய தேவை. இதை என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற பொறியாளர்களால் முடியும் என்றார் அவர்.
    முன்னதாக, பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதன்மை மாணவராக விஜேஸ் ஜெயன் தங்கப் பதக்கம் பெற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai