சுடச்சுட

  

  மாணவி பாலியல் துன்புறுத்தல்: கல்லூரி விரிவுரையாளர் கைது

  By DIN  |   Published on : 25th September 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக, பிரான்ஸ் நாட்டில் அளித்த புகாரின்படி, காரைக்கால் கல்லூரி விரிவுரையாளரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  காரைக்கால் மாவட்டம், பச்சூரைச் சேர்ந்த கிறிஸ்டிராஜ் மகன் பிரான்சிஸ் (35). இவர் எம்.டெக் படித்துவிட்டு தனியார் கல்லூரியில் தாற்காலிக விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணமானது.
  இவரது உறவினர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் காரைக்கால் வந்துள்ளார். உறவினரின் 16 வயது மகளை, பிரான்சிஸ் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
  இந்த சம்பவத்துக்குப் பின்னர் அவர்கள் நாடு திரும்பினர். அங்கு பள்ளியில் படிக்கும்போதும், வீட்டிலும் மாணவி, மனநிலை பாதித்தது போல காணப்பட்டாராம். அங்கு பரிசோதனை செய்த மருத்துவ நிபுணரிடம், காரைக்காலில் நிகழ்ந்த சம்பவத்தை மாணவி கூறினாராம். இதுகுறித்து மருத்துவத் துறையினர் மாணவியின் புகாரைப் பெற்று பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். இந்த புகார், புதுதில்லியில் உள்ள உள்துறை அமைச்சகம் மூலம் புதுச்சேரி காவல் துறை தலைமைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பிரான்சிûஸ சனிக்கிழமை கைது செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai