சுடச்சுட

  

  அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கி மூலம் ரூ.1.57 கோடி கடனுதவியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினார்.
  காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம், இந்தியன் வங்கி இணைந்து கடன் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் வேளாண்மை, மத்திய அரசின் முத்ரா கடன், ஸ்டான்ட் அஃப் இந்தியா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டது.
  வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிப் பேசியது:
  மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் மூலம் வங்கிகள் சிறுதொழில் தொடங்குதல், விவசாயம், சுயதொழில் உள்ளிட்டவற்றுக்கு கடனுதவி செய்கிறது.
  இவ்வாறு வங்கிகள் அளிக்கும் கடனுதவியின் மூலம் பயனாளிகள், குறித்த தொழிலை செய்து லாபம் ஈட்டவேண்டும்.
  வாங்கிய கடன் தொகைக் கொண்டு தொழில் செய்து, சரியான காலத்தில் கடனை செலுத்தினால் வங்கிகள் மீண்டும் தாராளமாக கடனுதவி செய்யும். இதை மனதில்கொண்டு, அரசின் திட்டங்கள் வெற்றிபெறவும், வாழ்க்கைப் பயணம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவும் பயனாளிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் அமைச்சர்.
  கடன் வழங்கும் முகாமில், 33 சுய உதவிக் குழுக்களுக்கும், 19 தனிநபர் பயனாளிகளுக்கும் என ரூ.1.57 கோடி கடன் வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai