சுடச்சுட

  

  காரைக்காலில் வாரச் சந்தை நடைபெறும் நகராட்சி திடலை சமன் செய்யும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.
  காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முருகராம் நகர் அருகே உள்ள நகராட்சித் திடலில் சந்தை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனைக்கு கொண்டுவருவர்.
  காரைக்கால் - திருநள்ளாறு பிரதான போக்குவரத்து சாலையையொட்டியுள்ள இந்த திடல் பள்ளமாக உள்ளதால், மழை காலத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் வியாபாரிகள்
  பொருள்களை விற்பனை செய்யமுடியாமலும், பொதுமக்கல் சேற்றில் நடந்து வர முடியாமலும் அவதியுற்றனர்.
  இந்த நிலையில், பருவமழை தொடங்கும் முன்னரே திடலை ஜல்லி, மணல் கொட்டி சாலைக்கு நிகராக அமைக்கவும், வெயில், மழையில் பாதிக்காத வகையில் கூரை, கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. இதை நகராட்சி ஆணையர் என்.காந்திராஜன் பார்வையிட்டு, மிகவும் அறிவுரை வழங்கினார்.
  25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார சந்தை நடைபெறும் நிலையில், திங்கள்கிழமை முதல் திடல் சமன் செய்யும் பணிகள் தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai