சுடச்சுட

  

  2-ஆவது சனிக்கிழமைசிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் பெருமாள்கள்

  By DIN  |   Published on : 25th September 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் முத்தங்கி அலங்காரத்திலும், கோயில்பத்து ஸ்ரீகோதண்டராம பெருமாள் கஜலட்சுமி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
  காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் கோயில் மூலவரான ஸ்ரீரங்கநாத பெருமாள், அனந்தசயன கோலத்தில் காட்சியளிக்கிறார். இக் கோயிலில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் உற்ஸவர் ஸ்ரீநித்யகல்யாண பெருமாளுக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது.
  இரண்டாவது சனிக்கிழமை மூலவரும், உற்ஸவரும் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனர்.
  முன்னதாக திருப்பதி திருமலை கோயிலில் நடத்தப்படுவதுபோல, சுப்ரபாத சேவை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் படிக்கப்பட்டன.
  காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீகோதண்டராம பெருமாள் கோயிலில், உற்ஸவர் ஸ்ரீகோதண்டராமர் கஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். திருமலைராயன்பட்டினம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் புஷ்பாங்கியில் காட்சியளித்தார். கோயில்களில் பக்தர்கள் தங்களது விருப்பப்படி பல்வேறு வகையான பிரசாதங்களை விநியோகித்தனர். பக்தர்கள் அதிகம் காணப்பட்ட காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயில்களின் வாயிலில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai