சுடச்சுட

  

  புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி வரும் அக்டோபர் 2-ம் தேதி நடக்கிறது.
   இப்போட்டி புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரயிலில் தொடங்கும். வண்ணம் தீட்டுவதற்கான அச்சடித்த கோட்டுப்படம் ரயிலில் தரப்படும். 3 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம். வண்ணம் தீட்ட வாட்டர் கலர் பயன்படுத்தக்கூடாது. புதுவையில் இருந்து விழுப்புரம் செல்வதற்குள் வண்ணம் தீட்டிவிட வேண்டும்.
   கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ், சிற்றுண்டி தரப்படும். சிறந்த 70 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு 6.11.2016-இல் பரிசளிக்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.200 செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.
   காந்தி வீதி ஸ்ரீ வித்யா மெடிக்கல், மெட்ராஸ் பேப்பர் மார்ட், செயின்ட் தெரேஸ் வீதி பாண்டி பேப்பர் மார்ட், புதுச்சேரி ஓவியப் பள்ளி ஆகிய இடங்களில் 30.9.16-க்குள் டிக்கெட் வாங்க வேண்டும். போட்டிக்கான அறிவிப்பை சட்டப்பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து வெளியிட்டார்.
   சுத்தமான இந்தியா, சுத்தமான புதுச்சேரி என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படும் என மன்றத் தலைவர் ஓவியர் இபேர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai