சுடச்சுட

    

    கட்டணக் குழு கட்டுப்பாட்டில் நிகர்நிலை பல்கலை.களை கொண்டு வர வலியுறுத்தல்

    By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டண குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கட்டண விகிதங்களை சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நல்வாழ்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
     இதுதொடர்பாக அதன் தலைவர் வேலாயுதம், செயலர் எஸ்.குமார் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     நீட் தகுதித் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கு முன்பு சென்டாக் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஏனைய கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலையில், அரசு மருத்துவக்க கல்லூரியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 20 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆகையால் எத்தனை இடம் காலியாக உள்ளது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.
     வரும் 26, 27 ஆம் தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வுக்காக தர வரிசைப் பட்டியலை பார்த்து மாஹே, ஏனாம் பகுதி மக்கள் வர முன்கூட்டியே வெளியிட வேண்டும்.
     வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும், நீட் தர வரிசைப்பட்டியலையும் உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai