சுடச்சுட

  

  கலைப்பாடப்பிரிவுகளில் காரைக்கால் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள்: மாணவர் கூட்டமைப்பு கண்டனம்

  By  புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  கலைப்பாடப்பிரிவுகளில், காரைக்கால் பிராந்திய கல்லூரிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாக, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

   அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி கலைக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கூடுதலான இடங்கள் வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்பு போராடி வருகிறது. முதல்வர், அமைச்சர்கள் தலையீட்டால் புதுவை பல்கலைக்கழகம் 400 இடங்கள் ஒதுக்கியதாகக் கூறப்பட்டது. பின்னர் அது 274 இடங்களாக குறைக்கப்பட்டது.

   ஆனால் இந்த 274 இடங்களும் 4 பிராந்தியங்களுக்கு சமமாக பிரிக்கப்படவில்லை. மாஹேயில் 18, ஏனாமுக்கு 10, புதுச்சேரியில் 5 கல்லூரிகளுக்கு 112 கல்லூரிகள், காரைக்காலில் 2 கல்லூரிகளுக்கு 136 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் புதுச்சேரி மாணவ, மாணவியர் கடும் பாதிப்பை அடைந்துள்ளனர்.

   புதுவை கல்வித்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. தாகூர் கலைக்கல்லூரியில் இடங்களை கூடுதலாக்கி இருக்க வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு கலைப்பாடப்பிரிவுகளுக்கான இடங்களை 4 பிராந்தியங்களுக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் சுவாமிநாதன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai